தேவையான பொருட்கள்
முள்ளங்கி - கால் கிலோ
கடலை மாவு - 200 g
அரிசி மாவு, மிளகாய்த்தூள், ஆப்ப சோடா - தலா ஒரு கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முள்ளங்கியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .
கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஆப்ப சோடா அனைத்தையும் கலந்து தண்ணீர் சேர்த்து போண்டா போடும் பதத்துக்கு பிசையவும்.
பின்பு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.