வாழைப்பூ பக்கோடா

kuttybabuPPT
0
வாழைப்பூ பக்கோடா 

தேவையான பொருட்கள் 

வாழைப்பூ - ஒன்னு 

பெரிய வெங்காயம் - 2 

கடலை மாவு - இரண்டு கப்

 மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

 சோள மாவு - 2 ஸ்பூன் 

கருவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - 200 கிராம்

 உப்பு - சிறிதளவு

 செய்முறை 

வாழைப்பூவை பொடி பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

 அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கருவேப்பிலையை போட்டு அதில் கடலை மாவு ,  மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.

 வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த மாவை பரவலாக போட்டு பாென்னிறமாக பொரித்து எடுக்கவும்.

 மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது , சிறிது சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.
 இந்த வாழைப்பூ பக்கோடா சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)