பிரமாதமான பிரியாணி செய்ய விருப்பமா?

kuttybabuPPT
0
பிரமாதமான பிரியாணி செய்ய விருப்பமா?


 எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்தால் பிரியாணி திகட்டாது .

நெய் மட்டுமே சேர்த்தால் திகட்டும்.

 எண்ணெய் மட்டுமே சேர்த்தால் பிரியாணி கமகமக்காது.

 பிரியாணி செய்யும்போது ஈரல் இல்லாமல் இறைச்சி மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

 ஈரல் இருந்தால் பிரியாணி ருசிக்காது.

 சிக்கன் பிரியாணிக்கு ஏலம், கிராம்பு தாளிக்க வேண்டாம் திகட்டும்.

 சிக்கன் பிரியாணியில் தயிர் தான் சேர்க்க வேண்டும்.

 தேங்காய் பால் மட்டன் பிரியாணியில் சேர்க்க வேண்டும்.

 இறால் பிரியாணிக்கு கொத்தமல்லி, புதினா சேர்க்கக்கூடாது. கருவேப்பிலை மட்டும் தான்.

 குக்கரில் பிரியாணி செய்யும் போது மூடியை மூடுவதற்கு முன்பாக சிறிது எண்ணெய் விட்டு கிளறி மூடினால் பிரியாணி உதிரி உதிரியாக வரும். குலைந்து போகாது.

 புதிதாக பிரியாணி செய்பவர்கள் பிரியாணி உதிர் உதிராக வரவேண்டும் என்றால் சாதத்தை தனியாக வடித்து கிரேவியுடன் கலக்க வேண்டும் .

பாசுமதி அரிசியை தனியாக வேகவைத்து வடிக்கும் போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

 தம் போடுவது பிரியாணியின் ருசியை அதிகரிக்கும் .

அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து அதன் மேலே இறுக மூடிய பிரியாணி பாத்திரத்தை வைத்து தம் போடலாம்.

 புலாவ் செய்வதற்கு அரிசி அரைவேக்காடும், பிரியாணி செய்வதற்கு அரிசி முழு வேக்காடு வெந்திருக்க வேண்டும் .

இறைச்சியை போட்ட பிறகுதான் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்க வேண்டும் .

முன்னாடியே போட்டால் விழுது பாத்திரத்திலேயே ஒட்டிக் கொள்ளும்.

 ப்ரைட் ரைஸ் செய்யும்போது ஒரு கப் அரிசிக்கு அரைக்கப் தண்ணீரும், பிரியாணிக்கு இரண்டு கப் தண்ணீரும் அவசியம் .

பாசுமதி அரிசியை பிசைந்து கழுவினால் அரிசி உடைந்து விடும்.

 அரிசியின் பசபசப்பும் போய்விடும்.
 பிரியாணி கமகமவென்று இருக்க வேண்டும் என்பவர்கள் பிரியாணி எசன்ஸ் தெளித்துக் கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)