அசோகா அல்வா

kuttybabuPPT
0
அசோகா அல்வா

 தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - அரை கப் 

நெய் - அரை கப் 

சர்க்கரை - ஒரு கப்

 முந்திரிப் பருப்பு - சிறிதளவு 

கோதுமை மாவு - 2 டீஸ்பூன் 

ஏலக்காய் பொடி - சிறிதளவு

 செய்முறை

 பாசிப்பருப்பை நன்கு கலைந்து குக்கரில் நான்கு விசில் விடும் வரை வேக வைத்து எடுக்கவும்.

 பின்பு பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து கெட்டியான பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை வறுத்து எடுக்கவும்.

 பிறகு அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.

 இரண்டு நிமிடம் கழித்து அதில் சர்க்கரையை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறவும்.

 கலவை கெட்டி பதத்தை அடைந்ததும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விடவும்.

 விருந்தினர்களை கவர ஆரஞ்சு நிற புட் கலரை சேர்த்து அல்வாவை பக்குவமாய் கிளறவும்.
 கடைசியில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு , ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி சுடச்சுட இறக்கினால் சுவையான அசோகா அல்வா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)