ராயல் முலாம் பழ பஞ்ச்

kuttybabuPPT
0
ராயல் முலாம் பழ பஞ்ச்

தேவையான பொருட்கள்

முலாம் பழம் நடுத்தர அளவு - 1

 மாம்பழம் - 1

 பிரஸ் கிரீம் - கால் கப் 

வெண்ணிலா ஐஸ்கிரீம் - நான்கு ஸ்கூப்

 சர்க்கரை - ரெண்டு மேசை கரண்டி

 பால் - அரை கப் 

புதினா இலைகள் - ஆறு

 அலங்காரத்திற்கு 

பாதாம், முந்திரி,  பேரிச்சை, ரோஸ் சிரப், உலர்ந்த திராட்சை மற்றும் பிஸ்தா - தேவையான அளவு

 செய்முறை

முலாம்பழத்தின் மேல் பகுதியை மட்டும் வட்டமாக வெட்டி எடுத்து அதன் உள்ளே இருக்கும் சதை பகுதியையும் விதைகளையும் டீ ஸ்பூன் காெண்டு தனியாக எடுக்கவும் .

இவ்வாறு எடுக்கும் போது பழத்தின் கூடு சேதமடையாமல் கவனமாக கையாளவும் .

பின்னர் பழத்தின் கூட்டை தனியாக எடுத்து வைக்கவும் .

பழத்தின் சதை பகுதியில் பாதி அளவை மட்டும் மிக்ஸியில் போட்டு அதனுடன் சர்க்கரை, புதினா இலைகள், பால் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும் .

அந்த விழுதுடன் பிரஸ் கிரிம் சேர்த்து நன்றாக கலக்கவும் .

பின்பு மாம்பழத்தை தோல் நீக்கி சுறுசுறு துண்டுகளாக வெட்டவும்.

 அவற்றை முலாம் பழ கூட்டில் முதல் அடுக்காக போடவும் .

தனியாக வைத்திருக்கும் முலாம் பழத்தின் சதைப்பகுதியை அடுத்த அடுக்காக போடவும் .

அதற்கு மேல் தயாரித்து வைத்திருக்கும் முலாம் பழ கூழை ஊற்றவும்.

 அதற்கு மேல் ஐஸ்கிரீம் போட்டு பாதாம், முந்திரி, திராட்சை, உலர்ந்த திராட்சை மற்றும் பிஸ்தாதை தூவவும்.
 கடைசியாக சில மாம்பழத் துண்டுகளை போட்டு ரோஸ் சிறப்பு ஊற்றி அலகரித்தால் ராயல் முலாம் பழ பஞ்ச் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)