பேபி கார்ன் சூப்

kuttybabuPPT
1
பேபி கார்ன் சூப் 


தேவையான பொருட்கள் 

பேபி கார்ன் - 6 

பொடிதாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் 

பொடிதாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

 பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

 பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தலை - ஒரு டேபிள் ஸ்பூன் 

பொடிதாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 டேபிள் ஸ்பூன்

 பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - இரண்டு டேபிள் ஸ்பூன் 

பொடியாக நறுக்கிய காளான் - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் 

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் 

தண்ணீர் - ஐந்து கப் 

எண்ணெய் - தேவைக்கு 

உப்பு - தேவைக்கு

 செய்முறை 

பேபி கார்னை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி , பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

 பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு மேலும் மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

 பின்னர் அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாக கொதித்த உடன் தீயை குறைக்கவும்.

 சோளமாவு ஒரு கப், தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைக்கவும்.

 அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி சூப் நன்றாக கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும்.

 பின்னர் அதில் முட்டை கோசை போட்டு கிளறி இறக்கவும்.
 இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.

Post a Comment

1Comments
  1. அருமையான பேபி கான் சூப்

    ReplyDelete
Post a Comment