குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்

kuttybabuPPT
0
குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்


 தோசைக்கல் எண்ணெய் வாணலி ஓரங்களிலும் பின்புறமும் பிசுபிசுப்பு இருக்கும்.

 அவற்றை நன்கு சூடு செய்து தோசை திருப்பியால் சுரண்டினால் ஏடு ஏடாக வந்துவிடும்.

 சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து பூரி மாவுக்கு செய்தால் பூரி உப்பலாக வரும்.

 பாயாசத்திற்கு பால் குறைவாக இருந்தால் ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் வெந்நீரில் கரைத்து சேர்த்தால் நிறமாகவும் சுவையாகவும் இருக்கும்.

 தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும் .

எலுமிச்சை பழங்களை காற்று போகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரம் பிரஷ் ஆக இருக்கும்.

 அடை மாவு நீர்த்து இருந்தால் ஒரு கை சேமியாவை போட்டு வைக்கலாம்.
 அதிக படி நீரை சேமியா உறிஞ்சி விடும் .

மிளகாயை வறுப்பதற்கு முன் உப்பை சிறிது வறுத்தால் மிளகாய் காரம் ஆகாது .

மிளகாய் பொடி வைக்கும் டப்பாவில் சிறிது சிறிது கட்டி பெருங்காயத்தை போட்டு வைத்தால் மிளகாய் பொடி எளிதில் கெடாமலும் நல்ல மனமுடனும் இருக்கும்.

 கீரை கடையும்போது வரமிளகாய்க்கு பதிலாக மோர் மிளகாயை தாளித்தால் வித்தியாசமாக இருக்கும்.

 சமையல் அறை சிங்கை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்காது.

 சிறிது நேரம் ஆவது காய விடுங்கள்.

 கல் உப்பை வெறும் வானிலையில் வறுத்து விட்டு ஜாடியில் வைத்தால் நீர் கோர்க்காது.

வெந்தய குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களை பொரித்து நொறுக்கி போட்டு குழம்பை இறக்கினால் வாசனையாக இருக்கும்.

 முட்டைக்கோசை துருவி நன்றாக வதக்கி மிளகாய் , உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் முட்டைக்கோஸ் துவையல் ரெடி.

 வெண்ணையை காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயம் போட்டால் நெய் மனமாக இருக்கும்.

 இட்லி மாவில் சிறிது தேங்காய் எண்ணெயில் வதக்கிய தேங்காய் துருவலை கலந்து வேகவைத்தால் மனமாக தேங்காய் இட்லி தயார் .

கேரட் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து அதனுடன் சில்லி சாஸ் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டைகளை பிரட்டு தூளில் திரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவைமிகு காய்கறி உருண்டை தயார்.

 சமையல் எண்ணெயை சூடாக்கும் போது வெற்றிலை அல்லது கொய்யா இலையை போட்டால் கசடு நீங்கும்.
 பிரட்டுகள் நடுவில் பன்னீர் தூண்டுகள் வைத்து தோசை கல்லில் நெய் விட்டு புரட்டி எடுத்தால் சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)