தேவையானவை
வெண்டைக்காய் - அரை கிலோ
மிளகாய் தூள் - ஒரு மேசை கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - இரண்டு
வெங்காயம் நறுக்கியது - ஒன்று
தக்காளி - ரெண்டு
கடலை மாவு - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
வெண்டைக்காயை சுத்தம் செய்து நீட்டு வாக்கில் கீறி கொள்ளவும்.
பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், உப்பு, கடலை மாவு போட்டு நன்கு கிளறி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும் .
இன்னொரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி போட்டு தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து லேசாக வதங்கியதும் உப்பு, தக்காளி விழுது போட்டு நன்கு சுண்ட கிளறிய பின்பு பொறித்த வெண்டைக்காயை போட்டு கிளறவும்.
இதில் நறுக்கிய கொத்தமல்லி தலை போட்டு கிளறி இறக்கினால் சுவை மிகுந்த பிந்தி ஃப்ரை சப்ஜி தயார்.
பயன்கள்
சத்துக்கள் நிறைந்துள்ள வெண்டைக்காய் சளி, இருமல் போன்றவற்றை குணமாக்குகிறது.
சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால் வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடிப்பது பலன் தரும்.
ஆஸ்துமா கோளாறும் நீங்கும்.
வழுவழுப்புடன் காணப்படும் இந்த காய் அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு அரும் மருந்தாக விளங்குகிறது.