தேவையானவை
ஆட்டு இறைச்சி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - 10 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
கத்தரிக்காய் - 100 கிராம்
மஞ்சள் பூசணிக்காய் - 50 கிராம்
கடலைப்பருப்பு - 150 கிராம்
துவரம் பருப்பு - நூறு கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை தூள் - ஒரு தேக்கரண்டி
புளி கரைசல் - சிறிதளவு
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ தலா - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
செய்முறை
குக்கரில் நன்கு கழுவிய கடலை பருப்பு , துவரம் பருப்பு போட்டு அதனுடன் மட்டன், மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும் .
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும் .
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய், பூசணிக்காய் சேர்த்து கிளறவும் .
இதில் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் வேகவைத்து மசித்த பருப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு மணம் வந்ததும் பட்டையை சேர்க்கவும்.
கடைசியில் சிறிது மல்லி இலை தூவி இறக்கி விடவும்.
பயன்கள்
ஆட்டு இறைச்சியில் வைட்டமின் பி6, வைட்டமின் பி 12, வைட்டமின் பி, பாஸ்பரஸ் , ஜெனிலியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன.
இது தவிர ஜிங்கு புரோட்டீன், ஆரோக்கியமான காெழுப்புகள், அத்யாவசியமான கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் உள்ளன.
அசைவ புரோட்டின் உணவு சுண்டல் ஒப்பீடு செய்யும் ஆட்டு இறைச்சி கலோரிகள் குறைவு.
வாரம் ஒரு முறை உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.