தேவையான பொருட்கள்
முட்டை - பத்து
பல்லாரி வெங்காயம் - இரண்டு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
ஆயில் - ஐந்து மேசை கரண்டி
செய்முறை
முதலில் ஒரு வாணிலையில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பாதி அளவு வேக விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும் .
வதங்கிய வெங்காயம் பச்சை மிளகாய் உடன் முட்டையை உடைத்து ஊற்றி மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடானதும் எண்ணெய் விட்டு ஒவ்வொரு குழிகளிலும் இந்த கலவையை ஊற்றவும் .
ஒரு புறம் வெகவும் திருப்பி விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடலாம்.
இப்போது மிக மிக ருசியான சத்துக்கள் நிறைந்த முட்டை பணியாரம் தயார்.