தேவையானவை
பால் - ஒரு லிட்டர்
கான்பிளார் - 50 கிராம்
சர்க்கரை பொடித்தது - ஒரு கப்
கிரீன் - ஒரு கப்
ரோஸ் எசென்ஸ் - ஆறு துளி
ஏலக்காய் - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா நறுக்கியது - இரண்டு ஸ்பூன்
செய்முறை
பாலை காய்ச்சி அதில் பாதி அளவு எடுத்து அதனுடன் கான்பிளாரை சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.
மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
இந்த இருபால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் எசென்ஸ், ஏலக்காய், பருப்பு வகைகள் கலந்து குல்பி மாேல்டில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்து கலவை கெட்டியானவுடன் எடுத்து சாப்பிடலாம்.