காட்டுயானம் சூப்

kuttybabuPPT
0
காட்டுயானம் சூப்

தேவையானவை

காட்டுயானம் அரிசி மாவு -2 ஸ்பூன்

 பூண்டு - ஒன்னு 

தக்காளி - ஒன்னு

 கேரட் - ஒண்ணு 

பீன்ஸ் - மூணு 

பெப்பர் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 சீரகம் - சிறிதளவு 

நெய் - ஒரு ஸ்பூன் 

கருவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

முதலில் காட்டுயான அரிசி மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் தக்காளி, உரித்துப் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் .

ஒரு வாணலியில் நெய் ஊற்றி சிறிது சீரகம் ,கருவேப்பிலை சேர்த்து அரை தக்காளி கலவையை சேர்த்து கேரட், பீன்ஸ் நறுக்கி அதில் சிறு தண்ணீர் விட்டு வேக விடவும்.

 இப்போது கரைத்த காட்டுயானம் மாவை சேர்க்கவும் .

உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
 கொதிக்க விட்டு இறக்கவும் சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)