நெக்ட்ரின் பழ ஐஸ்கிரீம்
தேவையானவை
நெக்ட்ரின் பழம் - ஆறு
தயிர் - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
தேன் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை
நெக்ட்ரின் பழத்தை கழுவி ஒரு தட்டில் இடைவெளி விட்டு அடுக்கிக் கொள்ளவும் .
இல்லை என்றால் ஃப்ரீஷரில் வைக்கும் போது எல்லாம் ஒன்றாக சேர்ந்து விடும்.
நெக்ட்ரின் பழங்களை நான்கு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து பின் எடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு சர்க்கரை, தயிர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த கலவையில் தேன் சேர்த்து ஒரு கப்பில் போட்டு நன்றாக மூடி மீண்டும் 3 மணி நேரம் வரை ஃப்ரீஸரில் வைத்து பின் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது மிகவும் இலகுவான ஆரோக்கியமான பழத்திலான ஐஸ்கிரீம் தயார் .
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையில் இருக்கும்.