குதிரைவாலி கொழுக்கட்டை பாயாசம்

kuttybabuPPT
0
குதிரைவாலி கொழுக்கட்டை பாயாசம்

தேவையானவை 

குதிரைவாலி, புழுங்கரிசி - அரை கப்

 வெல்லம் - முக்கால் கப் 

தேங்காய் - கால் மூடி 

ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்

 செய்முறை

குதிரைவாலி, புழுங்கல் அரிசியை நன்கு கழுவி அதனுடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் .

பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.

 அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

 அரைத்த குதிரைவாலி மாவை முருக்கு பிழியும் குழாயில் உருண்டையாச்சு போட்டு கொதிக்கும் தண்ணீரில் பிழிந்து விடவும்.

 மாவு வெந்ததும் உதிரி உதிரியாக கொழுக்கட்டைகள் போல தண்ணீரின் மேல் மிதக்கும் .

அவற்றை தண்ணீர் இல்லாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் பாத்திரத்தில் மீதம் உள்ள தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.

 அதனுடன் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்க்கவும் .
அதில் தேங்காய் பூ துருவல், ஏலக்காய் தூள் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)