ஸ்பைசி ரெஸ் க்யூப்ஸ்

kuttybabuPPT
0
ஸ்பைசி ரெஸ் க்யூப்ஸ்

தேவையானவை 

அரிசி மாவு - ஒரு கப் 

கடலைமாவு, தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை - கால் கப் 

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

 மிளகாய்த்தூள், சாட் மசாலா, மாங்காய் தூள் தலா - ஒரு டீஸ்பூன் உப்பு

 எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

அரிசி மாவு,கடலை மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து தனியே வைக்கவும்.

 கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு கொதி விடவும்.

 பின்னர் மாவு கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறி மாவு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

 மற்றொரு பாத்திரத்தில் மாவை மாற்றி கை பொறுக்கும் சூட்டில் சப்பாத்தி மாவு போல் உருதுவாக பிசைந்து சப்பாத்தியாக திரட்டி பீட்சா கட்டரால் சதுரமாக நறுக்கவும்.

 பின்னர் அவற்றை சூடான எண்ணெயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 இதனுடன் வறுத்த நிலக்கடலை, மிளகாய் தூள், சாட் மசாலா, மாங்காய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)