மொச்சை குழம்பு

kuttybabuPPT
0
மொச்சை குழம்பு


தேவையானவை 

பச்சை மொச்சை உரித்தது - 100 கிராம்

 சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்

 புளி - எலுமிச்சை அளவு 

கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் - தலா அரை ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - ஒன்று 

தேங்காய் பால் - ஒரு சிறிய கிண்ணம்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை

 புளியை 250 மில்லி தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

 பாசிப்பருப்பை குழைய வேக வைக்கவும்.

 மொச்சையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும் .

வதக்கிய மொச்சை, சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை புளி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

 வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்கவும் .

கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்தமிளகாய் தாளித்து கொட்டி இறக்கவும்.
 கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)