ஆரஞ்சு பர்பி சாப்பிட்டா வாழ்க்க ஹெப்பி

kuttybabuPPT
0
ஆரஞ்சு பர்பி 

தேவையான பொருட்கள் 
ஆரஞ்சு பழங்கள் - 4

 சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்

 சர்க்கரை -  400 கிராம் 

முந்திரி, பாதாம் பொடியாக புதிதாக நறுக்கியது - 2 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்

 நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

ஆரஞ்சு பழங்களை உரித்து மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி சுலைகளை தனியாக எடுத்து வைக்கவும்.

 கோவாவை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

 அதனை அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில் கொட்டி அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

 இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கலவையை கெட்டியான பதத்துக்கு வரும் வரை கிளறவும் .

பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளை கொட்டி கிளறவும்.

 இப்போது கலவை சற்றே நீர்த்துப் போகும் .

அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும் .

கெட்டியான பதத்துக்கு வரும்போது அதில் நெய், ஏலக்காய் தூள், முந்திரி பாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.

 இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

 நெய் தடவிய தட்டில் கலவியை கொட்டி சமமாக்கவும்.
 ஆரிய பின் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)