தேவையானவை
கண்டென்ஸ்டு மில்க் - ஒரு டின்
மில்க் பவுடர் - ஒன்றரை கப்
ரோஸ் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
உப்பு இல்லாத வெண்ணை - இரண்டு டேபிள்ஸ்பூன்
முந்திரி - சிறிதளவு
செய்முறை
மேற்காணும் எல்லா பொருட்களையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.
பின்னர் அந்த பாத்திரத்தை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து வெளியே எடுத்து நன்றாக கலந்து விட்டு மறுபடியும் அவனில் ஒரு நிமிடம் வைக்கவும்.
பின்னர் மீண்டும் வெளியே எடுத்து நன்றாக கலந்து மேலும் ஒரு நிமிடம் வைக்கவும்.
பின்னர் வெளியே எடுத்து ஐந்து நிமிடம் கழித்து கை பொறுக்கும் சூட்டிலேயே பேடாவாக தட்டி நடுவில் முந்திரியைப் பதித்து காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்.