கோவைக்காய் சட்னி, இருக்காதீங்க பட்னி

kuttybabuPPT
0
கோவைக்காய் சட்னி

தேவையானவை 

கோவைக்காய் - கால் கிலோ

 வெங்காயம் - ஐந்து 

பூண்டு பல் - 4

தனியா - ஒரு டேபிள் ஸ்பூன் 

வெந்தயம் - ஒரு டீஸ்பூன் 

புளி - எலுமிச்சை அளவு 

உப்பு ,எண்ணை - தேவைக்கு ஏற்ப

 கடுகு - அரை டீஸ்பூன் 

செய்முறை 

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .

கோவைக்காயை நன்கு அலசிவிட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும் .

பிறகு நீளவாக்கில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் .

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவைக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

 பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

 கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
 சுவையான கோவைக்காய் சட்னி தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)