தேவையான பொருட்கள்
புதினா - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - எட்டு
பச்சை மிளகாய் - இரண்டு
புளி - எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் - கால் கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை
நன்கு சுத்தம் செய்த புதினா இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும் .
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சின்ன வெங்காயத்தை நிறம் மாறும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு புதினா இலைகளை அந்த சூட்டில் வதக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் வதக்கிய பொருட்கள் தேங்காய் துருவல், புளி, உப்பு மற்றும் தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து அரைத்த விழுதில் சேர்த்தால் புதினா சட்னி தயார்.