தேவையான பொருட்கள்
முட்டை - ஆறு
வெங்காயம் நறுக்கியது - 2
பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது - மூணு
இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கடலை மாவு - ஒரு கப்
செய்முறை
முட்டையை உடைத்து அடித்துக் கொள்ளவும் .
வெங்காயம், மிளகாய், இஞ்சியை சிறிது எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும் .
கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்து தளர்த்தியாக மாவை கரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் அடித்து வைத்த முட்டை, வெங்காய கலவை பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ரவை தோசை போல மாவை சுழற்றி ஊற்றி முட்டை கார தோசை தயாரிக்கவும்.
வழக்கமான தோசையிலிருந்து வித்தியாசமான கலவையில் இந்த கார தோசை சுவை ஆக இருக்கும்.