தேவையானவை
ராகி சேமியா - ஒரு பாக்கெட்
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
பொடித்த வெல்லம் - இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
ராகி சேமியாவை 3 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து இட்லி தட்டில் பரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே தேங்காய் துருவல், பாெடித்த வெல்லம், ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
விரும்பினால் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.