தேவையானவை
பேபி கார்ன் - 8
கோதுமை மாவு அல்லது மைதா - ரெண்டு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பேபி கார்ணை நீளவாக்கில் நறுக்கி பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் .
இவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு அல்லது மைதா, அரிசி மாவு, சோள மாவு , தயிர், இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள், கரம் மசாலா பொடி, உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக கலக்கவும்.
இதில் சிறது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
கடைசியாக எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி கலக்கவும்.
பேபி கார்ன் துண்டுகளை இந்த மாவில் போட்டு நன்றாக புரட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் பேபி கார்ன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணையில் கருவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து, பொறித்த பேபிகார்ன் துண்டுகளுடன் கலக்கவும்.
இப்போது சுவையான பேபி கார் 65 ரெடி.
அருமை 👌💐💐
ReplyDelete