தேவையானவை
பட்டாணி - ஒரு கப்
வெங்காயம், பிரட், தக்காளி - ஒன்று
கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு
பச்சை மிளகாய் - மூணு
முந்திரி பருப்பு - ஐந்து
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - இரண்டு சிட்டிகை
பூண்டு - ரெண்டு பல்
பால் - அரைக்கப்
கரம் மசாலா தூள் - ரெண்டு சிட்டிகை
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பச்சை பட்டாளியை குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
முந்திரி பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும் .
மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி பால் சேர்க்கவும்.
சிறிது தண்ணீரும் சேர்க்கவும் .
இதில் வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கஸ்தூரி மேத்தி சேர்த்து சூடாக பரிமாறவும்.