தேவையான பொருட்கள்
பாசி பயிறு - நூறு கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - மூன்று
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பயிரை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் சீரகம், காய்ந்த மிளகாயை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
அதில் உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
சூடான தோசை கல்லில் மாவை ஊற்றி நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.