தேவையானவை
சர்க்கரைவள்ளி கிழங்கு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
பால் - அரை லிட்டர்
நெய் - 3 ஸ்பூன்
முந்திரி - 15
ஏலம் - 7
செய்முறை
சர்க்கரைவள்ளி கிழங்கை குக்கரில் போட்டு நீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவும் .
அவற்றின் தோலை உரித்து விட்டு துருவி வைக்கவும்.
அதேபோல் பாலை காய்ச்சி சிறிது சுண்டிய பின் இறக்கி ஆற விடவும்.
ஒரு கடாயில் நெய்யை விட்டு முந்திரியை போட்டு வறுக்கவும்.
முந்திரி சிவந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும் .
பிறகு அதே நெய்யில் துருவிய சர்க்கரைவள்ளி கிழங்கை போட்டு வதக்கவும்.
பின்பு பொடித்த வெல்லம் போட்டு கிளறவும் .
வெல்லம் கரைந்ததும் இறக்கி பால், முந்திரி, பொடித்த ஏலம் ஆகியவை போட்டு கிளறவும்.
அருமை 👌💐💐
ReplyDelete