தேவையானவை
உளுந்தம் பருப்பு - அரை கப்
அரிசி மாவு, தேங்காய் துண்டுகள் - தலா இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகு - அரை டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - அரை இன்ச்
கருவேப்பிலை - ஒரு கொத்து
மல்லித்தழை, உப்பு - சிறிதளவு
செய்முறை
உளுந்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து மெதுவடை பதத்திற்கு மிக்ஸியில் அரைக்கவும்.
இதனுடன் அரிசி மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளி எடுத்து காய்ந்த எண்ணெயில் போடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.