தேவையானவை
சேமியா - 200 கிராம்
உருளைக்கிழங்கு - மூணு
கேரட் - மூணு
வெங்காயம் - நாலு
மைதா - 50 கிராம்
ரஸ்க் தூள் - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தலை - சிறிதளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி,
உப்பு , எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கு,
கேரட் மசித்துக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் பச்சை மிளகாய் வறுக்க வேண்டும்.
சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடித்தட்டில் போட்டு வடித்து வைக்க வேண்டும் .
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு சீரகம் தாளிக்க வேண்டும் .
அதனுடன் வெங்காயம் , பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும் .
அதில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், வடிகட்டிய சேமியா போட வேண்டும்.
மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
மைதா மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறி கலவையை உருண்டையாக உருட்ட வேண்டும்.
உருண்டையை மைதாவில் முக்கி ரஸ்க் தூண்டில் புரட்டி தோசை கல்லில் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.