ரவை பக்கோடா

kuttybabuPPT
0
ரவை பக்கோடா 


தேவையானவை

வெள்ளை ரவை - ஒரு கப்

 அரிசி மாவு - ஒரு டீஸ்பூன் 

பெரிய வெங்காயம் - ஒன்னு

 பச்சை மிளகாய் - இரண்டு

 இஞ்சி - சிறு துண்டு

 கொத்தமல்லி தழை, கருவேப்பிலை - சிறிதளவு 

முந்திரி பருப்பு - ஆறு 

உப்பு , எண்ணை - தேவைக்கு ஏற்ப

 செய்முறை 

வாணிலையில் சிறிதளவு நெய்விட்டு வெள்ளை ரவையை போட்டு வாசம் வரும் வரை வதக்கவும்.

 சிறிது ஆறியதும் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, உடைத்த முந்திரி பருப்புகள், தேவையான உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

 அப்போதுதான் ரவை நன்கு மென்மையாகும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவிலிருந்து சிறிது எடுத்து உதிரி உதிரியாக போட்டு வேக விடவும்.

 பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.
 சுவையான மாெறுமாெறுப்பான ரவை பக்கோடா ரெடி..

Post a Comment

0Comments
Post a Comment (0)