காளான் போண்டா

kuttybabuPPT
0
காளான் போண்டா
தேவையானவை 

காளான் - ரெண்டு பாக்கெட்

 மைதா மாவு - கால் கப் 

சோள மாவு - கால் கப்

 மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன் 

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 வெங்காயம் - ஒன்று 

உப்பு - தேவையான அளவு

 ஃபுட் கலர் - ரெண்டு சிட்டிகை

 எண்ணெய் பொறிப்பதற்கு - தேவையான அளவு 

செய்முறை 

காளான் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 இதோடு மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

 இப்போது கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக சூடானதும் கலந்து வைத்துள்ள கலவையிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சேர்க்கவும்.
 மொறுமொறுப்பாக பொரிந்து எடுத்தால் சுவையான காளான் போண்டா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)