சீஸ் மிளகாய் பஜ்ஜி

kuttybabuPPT
0
சீஸ் மிளகாய் பஜ்ஜி 
தேவையானவை

 பஜ்ஜி மிளகாய் - 10

 கடலை மாவு - 150 கிராம்

 அரிசி மாவு - 50 கிராம் 

ஓமம் - கால் சிட்டிகை 

உப்பு - தேவையான அளவு

 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி 

சீஸ் ஸ்லைஸ் - நான்கு 

பொடித்த கான்ப்ளக்ஸ் - 50 கிராம்

 பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை

 எண்ணெய் - தேவையான அளவு

 பக்குவம் 

கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

 பச்சி மிளகாயை நடுவில் கீறி விதைகளை நீக்கிவிட்டு சீசை உள்ளே வைத்து மூடவும்.
 பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பாெடித்த கான்ப்ளக்ஸில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)