தேவையானவை
கேழ்வரகு - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 300 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
உப்பு - சுவைக்கு
பச்சை மிளகாய் அரிந்தது - ஆறு
கருவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணெய் - 200 கிராம்
செய்முறை
கேழ்வரகு மாவில் வேகவைத்த உருளைக்கிழங்கு, அரிந்த வெங்காயம், உப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து வெந்நீர் விட்டு சிறுசிறு வடைகள் போல் தட்டி அதனை தோசை தவாவில் பொன்னிறமாக இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் கேழ்வரகு உருளை வெங்காய கட்லெட் ரெடி.
இதனை எண்ணெய்யிலும் பொரித்து எடுக்கலாம்.