பிரட் பக்கோடா

kuttybabuPPT
0
பிரட் பக்கோடா 

தேவையானவை 

பிரட்டு - நான்கு சிலைஸ்கள் 

பிரட் தூள் - அரைக்கப்பு 

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

 கடலை மாவு - ஒரு டீஸ்பூன்

 உப்பு , எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

 வெங்காயம் - ஒன்று 

பச்சை மிளகாய் - ரெண்டு 

இஞ்சி - சிறு துண்டு 

பூண்டு - இரண்டு பற்கள்

 கருவேப்பிலை, கொத்தமல்லி தலை - சிறிதளவு 

பூண்டு பற்கள் - மூன்று 

செய்முறை

வாய் அகன்ற பாத்திரத்தில் பிரட் ஸ்லேசுகளை போட்டு சிறிது தண்ணீர் விட்டு மசிக்கவும் .

அத்துடன் பிரட் தூள், அரிசி மாவு , கடலை மாவு, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.

 வாணிலையில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து உதிரி உதிரியாக போட்டு வேக விட்டு எடுக்கவும்.
 சுவையான பிரட் பக்கோடா ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)