தேவையானவை
ஊற வைத்து வேக வைத்து கம்பு - 200 கிராம்
தயிரில் ஊறவைத்த கெட்டி அவல் - 200 கிராம்
கேரட், கோஸ், பச்சை பட்டாணி, பீன்ஸ், வெங்காயம் அரிந்தது - தலா 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ரெண்டு ஸ்பூன்
கரகரப்பாக அரைத்த பச்சை மிளகாய் - ஆறு
கொத்தமல்லி அல்லது புதினா - ஒரு கப்
அரிசி மாவு அல்லது பிரட் தூள் - ஒரு கப்
எண்ணெய் - 150 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 250 கிராம்
உப்பு - சுவைக்கு ஏற்ப
செய்முறை
வேக வைத்த கம்மில் ஊறவைத்த அவல், உப்பு, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, வதக்கிய காய்கறி கலவை, கொத்தமல்லி அல்லது புதினா சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து சிறு சிறு வடிவங்களில் தட்டி அதனை அரிசி மாவு அல்லது பிரட் தூளில் பிரட்டி தவாவில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும் .
சுவையான கம்பு அவல் வெஜிடேபிள் கட்லெட் ரெடி.