முலாம் பழம் கிரனிதா

kuttybabuPPT
0
முலாம் பழம் கிரனிதா

தேவையான பொருட்கள் 

முலாபழம் - நடுத்தர அளவு ஒன்று

எலுமிச்சம் பழச்சாறு - ஒரு மேசைக்கரண்டி 

தண்ணீர் - ஒரு கப் 

சர்க்கரை - அரைக்கப்

ஐஸ் கட்டிகள் - எட்டு 

செய்முறை 

முலாம் பழத்தை சுத்தம் செய்து அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி முழுவதுமாக நறுக்கிக் கொள்ளவும்.

 சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும் .

நறுக்கிய முலா பழம் , எலுமிச்சை பழச்சாறு , சர்க்கரை பாகு ஆகிவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும் .

அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி பிரீஜரில் வைக்கவும் .

ஒரு மணி நேரம் கழித்து முள் கரண்ட்டிக்கொண்டு அதை முழுவதும் கிளறவும் .

பின்னர் அந்த முலாம்பழம் கலவையை அழகான பவுலில் போட்டு அதன் மேல் தேர் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)