தேவையானவை
வாழைக் காய் - ஒன்று
துருவிய பன்னீர் - ஒரு கப்
பொட்டு கடலை மாவு - கால் கப்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி நறுக்கியது - நான்கு டேபிள் ஸ்பூன்
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாழைக்காயை வேக வைத்து மசித்து கொள்ளவும் .
இதனுடன் துருவிய பன்னீர், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, இஞ்சி துருவல், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும் .
தேவைப்பட்டால் சில சொட்டுக்கள் தண்ணீர் சேர்க்கலாம்.
பிசைந்த கலவையை விரல் நீள வடிவில் அல்லது விருப்பப்பட்ட வடிவில் செய்து கொள்ளலாம் .
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி செய்து வைத்ததை பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் கபாப் தயார்.