தேவையானவை
தேங்காய் துருவல் - ஒரு கப்
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு , எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
கரம் மசாலா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கேரட் துருவல் - ரெண்டு டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
அரிந்த புதினா , மல்லித்தழை - தலா ரெண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
தேங்காய் துருவலை கெட்டியாக நைசாக அரைத்து கடலை மாவு , சோள மாவு சேர்க்கவும் .
உப்பு , கரம் மசாலா, சீரகம் , அரிந்த பச்சை மிளகாய் , கேரட் துருவல், இஞ்சி பூண்டு விழுது , மல்லி , புதினா தலைகள் , எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.