தேவையான பொருட்கள்
பச்சரிசி - ஒரு கப்
பால் - ரெண்டு கப்
பெரிய வெங்காயம் ,தக்காளி நறுக்கியது தலா - ஒன்று
பச்சை மிளகாய் - 3
புதினா, கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா ஒன்னு
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் நெய் விட்டு லவங்கம், பட்டை , பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும் .
இதனுடன் அரிசி, பால் சேர்த்து நன்கு கிளறி தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
நன்கு ஆவி வந்ததும் வெயிட் செய்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து ஒரு நிமிடத்திற்கு பிறகு இறக்கவும்.