தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 200 கிராம்
பச்சை வேர்க்கடலை - 100 கிராம்
உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வேர்க்கடலையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக கெட்டியாக அரைக்க வேண்டும் .
அரைத்த விழுது உடன் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காய பொடி, மிளகாய் பொடி சேர்த்து பிசைய வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து ஒரு துணியில் முறுக்குகளை பிழிந்து விட்டு அதனை கரண்டியால் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.