சப்பாத்தி வித் ட்ரை சப்ஜி

kuttybabuPPT
0
சப்பாத்தி வித் ட்ரை சப்ஜி 


தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு - ஒரு கப் 

உப்பு - தேவைக்கு

 எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்

 சப்ஜி செய்வதற்கு

எண்னெய் - 6 டேபிள்ஸ்பூன் 

பொடியாக அரிந்த உருளைக்கிழங்கு - அரை கப் 

உப்பு - தேவைக்கு

 பொடியாக அரிந்த கேரட் - 1/4 கப்

 பொடியாக அறிந்த தக்காளியுடன் ஊற வைக்க பட்டாணி - கால் கப்

 பொடியாக அரிந்த வெங்காயம் - கால் கப் 

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 3

 தக்காளி சாஸ் - ரெண்டு டீஸ்பூன்

 ஓரங்களில் ஒட்டுவதற்கு மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

 செய்முறை

சப்பாத்தி செய்வதற்கு கொடுத்த மாவை பிசைந்து சப்பாத்திகளாக போட்டு எடுத்து தனியா வைக்கவும்.

 குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளி சாஸ் தவிர மற்ற வற்றை விளக்கவும் .

நீர் விடாமல் தீயை குறைவாக வைத்து வெய்ட் போட்டு ஒரு விசில் விடவும்.

 விசில் வந்து ஆவி வெளியேறும்.

 தக்காளி சாஸ் சேர்த்து கலக்கினால் சப்ஜி ரெடி .


சப்பாத்தி உள்ளே இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் வைத்து மூடி பார்சல் மாதிரி செய்யவும்.
 மைதா மாவை நீர் விட்டு கரைத்து லேசாக பார்சலில் தடவி ஒட்டி தோசை கல்லில் போட்டு ஓரங்களில் எண்ணை விட்டு ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)