தேங்காய் அரிசி உப்புமா

kuttybabuPPT
0
தேங்காய் அரிசி உப்புமா

 தேவையான பொருட்கள்

பச்சரிசி - 200 கிராம்

 புழுங்கல் அரிசி - 100 g 

புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு

 தேங்காய் - ஒன்னு

 மிளகாய் வத்தல் - பத்து 

வெல்லம் - இரண்டு அச்சு

 கடலைப்பருப்பு , உளுந்தம் பருப்பு - தலா இரண்டு தேக்கரண்டி 

கடுகு - ஒரு மேசை கரண்டி

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை

இரண்டு அரிசியையும் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், வெல்லம் ஆகியவற்றை அரிசியோடு சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு அலம்மி தோசை மாவு பதத்தில் கரைக்க வேண்டும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து கரைத்த மாவை விட்டு கெட்டியாக கிளறி எடுக்க வேண்டும்.
 வாணலியில்  கரண்டியால் எடுத்தால் உதிர் உதிராக வரும் இது சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)