தேவையானவை
பன்னீர் துருவியது - ஒரு கப்
அம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது - 4
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - நான்கு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கோதுமை மாவு - இரண்டு கப்
ஓமம் - ஒரு டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசறி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும் .
துருவிய பன்னீர் ,இஞ்சி துருவல், அம்சூர் பவுடர், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் , மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும் .
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாதியாக தேய்க்கவும்.
அது லேசாக எண்ணெய் தடவி பன்னீர் கலவையை நடுவில் வைத்து மூடி மீண்டும் தேய்த்து சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் பன்னீர் பராத்தா தயார்.