தேவையானவை
மண்சட்டி - ஒன்னு
பரோட்டா - 3
சில்லி சிக்கன் - 100 கிராம்
சிந்தாமணி சிக்கன் - ஒரு பிளேட்
பாதாம் - தேவையான அளவு
மல்லத் தழை - சிறிதளவு
சிக்கன் கிரேவி - சிறிதளவு
அவித்த முட்டை - ரெண்டு
வாழை இலை வட்டமாக நறுக்கியது - 2
செய்முறை
எடுத்து வைத்திருக்கிற மண் பானையில் நறுக்கி வைத்திருக்கின்ற வாழை இலையை வைத்து அதில் பரோட்டாவை வைக்க வேண்டும்.
அதன் மீது சில்லி சிக்கனை பரப்பி சிறிதளவு மல்லி இலையை தூவி ஸ்பெஷல் கிரேவியை ஊற்ற வேண்டும்.
அதன் மீது இன்னொரு புரோட்டாவை வைத்து சிந்தாமணி சிக்கனை வைக்க வேண்டும் .
பிறகு மீண்டும் கிரேவியை ஊற்றி மல்லி இலைகளை தூவி இன்னொரு பரோட்டாவை வைக்க வேண்டும்.
கடைசியாக எடுத்து வைத்திருக்கின்ற பாதாம் பருப்புகளை தூவி அவிழ்த்த முட்டையை நான்காக நறுக்கி மேலே வைத்து மீண்டும் கிரேவியை ஊற்றி வாழை இலையால் மூடி மண்பானையோடு அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்களில் எடுத்தால் தம் பரோட்டா ரெடி.