தேவையானவை
தேங்காய் துருவல் - ஒரு கப்
பழுத்த வாழைப்பழம் - ரெண்டு
துருவிய வெல்லம் - கால் கப்
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
பல் பல்லாக கீறிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
உடைத்த முந்திரி - மூன்று டேபிள் ஸ்பூன்
செய்முறை
துருவிய தேங்காயை கெட்டியாக நைசாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை துண்டுகளாக அரிந்து போட்டு ஒரு கப் நீர் விட்டு இரண்டு கொதி விடவும்.
பழம் ரொம்பவும் கரைய கூடாது.
கொதித்ததும் துருவிய வெல்லத்தை அதில் போடவும் .
வாழைப்பழமும், வெல்லமும் நன்றாக சேர்ந்து வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை கலந்து இரண்டு கொதி வந்ததும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
ஒரு கரண்டியில் நெய் விட்டு காய்ந்ததும் தேங்காய் , முந்திரி தூண்டுகளை வறுத்து இந்த கலவையில் சேர்க்கவும் .
மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.