பன்னீர் ரோல்ஸ்

kuttybabuPPT
0
பன்னீர் ரோல்ஸ்


 தேவையானவை

வேகவைத்த உருளைக்கிழங்கு - மூணு

 துருவிய பன்னீர் - ஒரு கப் 

பிரட் சிலைஸ் - நான்கு 

நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்

 பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்

 இஞ்சி துருவல், மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன் 

கேரட் துருவியது - ஒன்று

 எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

முதலில் எடுத்து வைத்திருக்கிற பிரட் சிலைஸ்களை சிறுசிறு துண்டுகளாக்கவும்.

 அதன் பின் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் பிரட் துண்டுகள், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி துருவல், துருவிய பன்னீர் ஆகியவற்றை சேர்க்கவும் .

இதிலிருந்து சிறிது எடுத்து வட்டமாக தட்டவும் .

நடுவில் கேரட் துருவலை வைத்து மூடி விரல் நீளத்தில் உருட்டிக் கொள்ளவும்.

 இதே போல் எல்லாவற்றையும் உருட்டிக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி ஒவ்வொன்றாக பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் ரோல் தயார்.
 இதனை குறுக்காக வெட்டி சாஸ் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)