தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 500 கிராம்
நெய் - எட்டு தேக்கரண்டி
முந்திரி - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
வெல்லம் - 150 கிராம்
செய்முறை
சர்க்கரைவள்ளிக்கிழங்குகளை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் அவற்றை இட்லியை போல ஆவியில் வேக வைக்கவும் .
கிழங்குகள் ஆறியதும் அவற்றின் மேல் தோலை நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஆறு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு படுத்தவும்.
பின்பு அதில் முந்திரி திராட்சை இவற்றை போட்டு சிவக்க வறுக்கவும்.
பின்னர் மசித்து வைத்திருக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
5 நிமிடங்கள் கழித்து தூளாக்கப்பட்ட வெல்லத்தை அதில் கொட்டி கிளறவும்.
வெல்லம் கரைந்து கிழங்குடன் சேர ஆரம்பிக்கும் போது அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.
சிறிது நேரத்தில் கிழங்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் இந்த பதத்தில் அடுப்பு அணைத்துவிட்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை அல்வாவின் மேல் ஊற்றவும்.
இப்போது சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயார்
nyc receipt
ReplyDeleteThanks
Delete