வறுத்த இட்லி

kuttybabuPPT
0
வறுத்த இட்லி


 தேவையான பொருட்கள்

இட்லி மாவு - மூன்று கிண்ணம்

 இட்லி பொடி - மூன்று மேசை கரண்டி

 வெங்காயம் நறுக்கியது - 3

 கருவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது 

எலுமிச்சை சாறு - ஒரு மேசை கரண்டி

 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை

முதலில் இட்லி மாவை கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

 பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து கறிவேப்பிலையை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 பிறகு ஊற்றி வைத்துள்ள சிறு சிறு இட்லிகளை அத்துடன் சேர்த்து இட்லி பொடி போட்டு , எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
 இப்போது அருமையான வருத்த இட்லி தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)