தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - மூன்று கப்
தயிர் - 2 ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு சிறிது வெந்நீர் ஊற்றி தயிரை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் அதனுடன் அரிசி மாவு மற்றும் சோளமாவை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்துக் கலந்து கொள்ளவும்.
மேலும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் சிறிது கருவேப்பிலை சேர்த்து கலக்கி மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.