மால்புவா

kuttybabuPPT
0
மால்புவா
தேவையான பொருட்கள் 

மைதா, சோளமாவு -  தலா ஒரு கப்

 சர்க்கரை - 2 கப் 

குங்குமப்பூ, பச்சை கற்பூரம் - சிறிது

 ஏல பொடி - ஒரு டீஸ்பூன் 

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

 துருவிய பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்

 பால் - ஒரு லிட்டர்

 கன்டென்ஸன்ட் மில்க் - கால் கப் 

உப்பு - ஒரு சிட்டிகை 

எண்ணெய் - பொறிக்க

 வெண்ணிலா எசன்ஸ் - ஒரு ட்ராப்

 செய்முறை

ஒரு கப் சர்க்கரையில் சிறிது நீர் சேர்த்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.

 இதில் ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து தனியாக வைக்கவும்.

 மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும்.

 மீதி சர்க்கரையை இதில் சேர்த்து இரண்டு டேபிள் ஸ்பூன் துருவிய பாதாம் சேர்த்து மிதமான தீயில் ஒரு கப் பாலாக மாறும் வரை சுண்ட வைத்து இறக்கி ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும் .

அகலமான பேஷனில் சோளமாவு, மைதா , பேக்கிங் பவுடர் , உப்பு, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து மிருதுவான மாவு கலவையாக பிசைந்து வைக்கவும்.

 இதை சிறுசிறு வட்டங்களாக இட்டு சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து சர்க்கரை பாகில் போடவும்.
 ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து அடுக்கி அதன் மீது சுண்ட காய்ச்சின பால் மீதி பாதாம் துருவல் குங்குமப்பூ போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)