தேவையானவை
முலாம்பழம் - ஒன்னு
கெட்டியான கிரீம் நிறைந்த பால் - ஒரு லிட்டர்
ஜவ்வரிசி - அரை கப்
சர்க்கரை - ஒரு கப்
ஜம்ஜா விதைகள் - கைப்பிடி
கஸ்டட் பவுடர் - இரண்டு டீஸ்பூன்
செய்முறை
ஜவ்வரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் .
பிறகு தண்ணீரை வடித்து விட்டு அடுப்பில் வெந்நீர் வைத்து ஜவ்வரிசியை போட்டு வேக வைத்து எடுத்து தனிய வைக்கவும் .
ஜம்ஜா விதைகளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
முலாம்பழத்தை நறுக்கி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கவும்.
பிறகு பழக்கூழை மட்டும் தனியே எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும் .
பாலை காய்ச்சவும்.
கஸ்டட் பவுடரில் சிறிதளவு பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து பாலில் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து செய்யுங்கள் .
அரைத்து வைத்திருக்கும் முலாம்பழக் கூழை சேர்த்து கலக்கவும்.
பிறகு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
கடைசியில் வேக வைத்த ஜவ்வரிசி சேர்த்து கிளறவும்.
எல்லாம் சேர்ந்து திக்காக வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு அந்த பானத்தை குளிர விடவும்.
பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பருகும் போது வெளியே எடுத்து கண்ணாடி டம்ளர்களில் நிறைத்து மேலாக ஊறவைத்த ஜம்ஜா விதைகளை போட்டு பருக கொடுக்கவும்.
கோடைக்கு ஏற்ப சூப்பர் கூல்ட்ரிங்க் இது.